Thursday, December 31, 2015

என்றும் போல்

என்றும் போல் இன்றும் விடிய
என்றும் போல் கதிரவன் தோன்ற
என்றும் போல் விழித்தெழுந்து
 என்றும் போல் நீராடி
என்றும் போல் உண்டு
என்றும் போல் உடுத்தி
என்றும் போல் அயர்ந்து
 என்றும் போல் உறங்கி
 என்றும் போல் இ ன்றும் முடிய.

வரவு 2016

வரவு 2016
 செலவு 2015
 இலாபம் 1
 ஆகா என்ன
கண்டுபிடிப்பு
 ஆண்டு தோறும்
அவ்வாறே
இலாபம் தான்
 நம்பிக்கை
 நல்ல ஆராய்ச்சி தானே  

கேட்டாள் செவந்தி

கேட்டாள்  செவந்தி கேள்விகள் பல
 கேட்பாள் அவள் எப்போதும்
 தன்னை நினையாமல்
தன்  நிலை மறந்து
 கேட்பாள் கேள்விகள் பல

செவந்திக்கு ஒரு சௌந்தரம்  பதில் சொல்ல
கேட்பாள் செவந்தி கேள்விகள் பல
 மேகலாவுக்கு என்ன
முடியவில்லையா  என்ன என்ன
 கேட்கிறாள் தொடர்ந்து

சௌந்தரம்  சொல்கிறாள்  எல்லாம்
அறிந்த மாதிரி எப்போது போலத்தான்
மேகலாவிடம் சொல்கிறாள்
 மேகலா  முதலில் வருந்தினாள்
 மனிதனுக்கு உடல் நிலை மாற்றம்
ஒரு சாதாரண  நிகழ்வே.

தமிழ் மொழி

பால் ஓடும் ஆறு பாலாறு
 தேனும் பாலும்  கலந்து
 பாய் ந்து ஓடும்  ஆறு
தமிழ் மொழி என்ற ஆறு
எதுகையும் மோனையும்
இலக்கணமும் இலக்கியமும்
பொருளும் கருத்தும்
ஓசையும் ஒலிகளும்
 நடையும் எளிமையும்
ஒருங்கே காணுபது
தமிழ் மொழி அல்லா
வேறிடம் இல்லை.

Sunday, December 20, 2015

மாறு வது இயல்பு

காலை எழுந்தவுடன் படிப்பு
 என்று பாடினான் பாரதி
இன்று நிலை  மாறி விட 
 குழநத்தைகள்  கையில்
 கணினி , அலை பேசி
 அதில் விளையாட்டு  
 காலை  முதல் இரவு வரை
 காற்றோட்டம் காணவில்லை
 வெயிலும் நிழலும் அறியாத
 விளையாட்டு கையிலே 
 என்று அங் காலாயக்க  தோன்ற
 அதிலும் நயம் பயக்கும்
 காலங்கள் மாறுவது போல்
 மனிதர்கள்  மாற
 சிறுவர்களும்  மாறு வது இயல்பு


Thursday, December 17, 2015

சற்று ஏறக்குறைய

சற்று ஏறக்குறைய  தோன்றிய  எண்ணம்
 சற்று மாறுபட்டதாக இருக்கும் என்ற நோக்கம்
 சற்று நாலும்  நினைக்கும்  என்ற க்ருத்து
 முயற்சியைப்    பின்தள்ள
 நினைப்புக்கள் முடங்க
 முன்னேற்றம் காண் முடியவில்லை. 

Sunday, December 13, 2015

வெட் ப தட்பம்

மனிதன் தன தேவைக்கு
இயற்கையை  வதைத்தான்
 தானாக முடியாமல்
 சிதைந்தது வெட் ப தட்பம்
கூப்பாடு போடுகிறான் இன்று
 கூட்டம் கூட்டுகிறா ன் வேகமாக
 தனக்கு தனக்கு என்றால்
 பதக் பதக் என்கிறதோ மனம்