Saturday, December 20, 2014

பிரிவினை

கணக்கில்லாமல்  பாகப் பிரிவினை
 கணக்குப் பண்ணாமல் சொத்துப் பிரி வினை
கணக்கு கொடுக்காமல் ஒரு பிரிவினை
எங்கு கண்டோம் இம்மாதிரி பிரிவினை
காண ஆவல் இருந்தால் வரவேற்கிறோம்
எங்கள்  குடுமபப் பிரிவினைக்  காண 

யசோதையின் கண்ணன்

கண்ணனின் கையில் குழல் 
கண்ணிலே குறும்புத  துளி   
உதட்டிலே  முறுவல் 
 எதற்கோ  தெரியவில்லை 
முட்டை முழி முழிக்கிறான் 
 யசோதையின் கண்ணன் 

Sunday, November 9, 2014

உண்மை

உண்மை கசக்கும்
கசப்பது உண்மை
உண்மை கசக்கும்
கசக்குவது உண்மை
உண்மை கசக்கும்
கசம் தருவது  உண்மை
கச ப்பது உண்மை
கசங்குவது உண்மை
கசங்கப்படுவது  உண்மை
உண்மை செத்து மடிந்தாலும்
இறுதி  வரை நிற்கும். 

Saturday, November 8, 2014

மனிதன் தூங்குகிறான்

பூ பூக்குது
காகம்  கரைகிறது
குதிரை கனைக்கிறது
நரி உளையிடுகிறது
யாவும்  விழிதது  எழ
கதிரவன் தோன்றுகிறான்
நிலவு மறைகிறது
மனிதன் தூங்குகிறான்
 காலை விடியலைக்  காணாமல்  

வாழ் மகனே

கண்ணிலே கனிவு
மனதிலே தெளிவு
அறிவிலே செறிவு
பேச்சிலே அன்பு
செயலிலே  பண்பு
நடையிலே  நிமிர்வு
என்று வாழ் மகனே

Sunday, June 1, 2014

முயற்சி

சாதாரணம் என்று நினைத்தது 
முடியாதாதாக மாறி
முடியாதது என்று எண்ணியது 
எளிதாக மாற 
வியந்து வலிந்து நின்றான் 
மனிதன் என்ற ஒரு பிறவி 

மனது தான் காரணம் 
ஆவதும் அதனாலே 
அழிவதும் அதனாலே 
முயற்சி செய்தால் முடியம் 
இல்லையெனில்  எள்ளளவும் 
நடக்காது எவ்வாறும்.

Friday, May 30, 2014

ஒரு குரங்கு

எதிரிலே ஒரு மரம்
அதிலே ஒரு குரங்கு
 தவ்வி தாவி விளையாடி
மேலும் கீழும்  இறங்கி
 பழ த்தைப் பூசித்து
கொட் டையைத் துப்பி
மகிழ்ந்து ஆரவாரத்துடன்
மரத்தின் மீது அமர
 மழை  கொட்ட
 குறைன்னு பதுங்கி
 இடம் தெரியாமல்
 கொப் புக்களின் நடுவே
ஓடுங்கி பயத்துடன்
தன வாலைச்   சுருட்டிக்கொண்டு
அமைதியானது