கூட்டிச் சென்றான்
உலகத்தைக் காண
ஒவ்வொரு திசையும்
காட்டினான் அக்கறையாக
ஒவ்வவொரு நாட்டையும்
முழுவதும் காட்டினான்
அன்போடு
ஒவ்வொன்றையும் காட்டியவன்
பெண்ணின் மனதைக் காணவில்லை
காண விழைய வில்லை
ஏனோ தெரியவில்லை
தன் நிலை பிறழாதவன்
இன்னல் பட வேண்டியதில்லை
அவை வரும் போகும்
செலவினம் இல்லை.
வந்த வழியில் போய் விடும்
சற்று தடுமாற்றத்தைக் கொடுத்து
தாங்கிக் கொண்டு திடமாக
நோக்கின்
புல் மீது படர்ந்த
பனி போல விலகிடும்
சட்டென்று !
விட்டில் பிறந்த பெண்ணை
எள்ளி நகையாடி
நைந்து பேசி
நோகச் செய்த
போது மகிழ்ந்த
உள்ளம்
இன்று தன மகள்
இன்னல் படும் போது
துடிப்பது
நியாயமன்றோ?
வினை விதைத்தவன்
வினை அறுப்பான்
முற்பகல் செய்யின்
பிற்பகல் தானே வரும்
என்ற கோட்பாடுகள்
நினைவுக்கு வரின்
அது ஒரு
வேறுபாடு அல்ல!