Wednesday, March 2, 2016

ஒட்டுண்ணி

ஒட்டுண்ணி உறிஞ்சி வாழும்
தன்னாலே  உணவைத் தேடாது
அரசியல்வாதி பறித்து  வாழ்வான்
 தன்னாலே   உழைக்காமல்
 தொழிலதிபன் உருவி வாழ்வான்
 தன்னாலே  முடிந்த வரை
உழவன் உழைத்து வாழ்வான்
தன்னாலே  வியர்வை  வடிய.

Tuesday, March 1, 2016

நானும் நம்பினேன்

நானும் நம்பினேன்  என்னுடய உற வுகளை
 பிறந்தவர்களையும் சேர்ந்தவர்களையும்
 ஒன்றுக்கு ஒன்றாக நினைத்தேன் மனதார
 நம்பினார் மோசம் போவதில்லை
 போனேன் படு மோசமாக  ஒரு வழியில் அல்ல
 இரத்தமும் கசிந்தது  ஏகமாக
 உணர்வுகளும்  நசிந்தன் மிகவாக
 கண்ணீர்  வற்றி  வெறுப்பு நிரம்பி
 ஒதுங்கி வாழ்கிறேன்  நானாக
பந்தமும் விலகி பாசமும்  சரிந்து.

பிரிவு என்பது

பிரிவு என்பது தவிர் க்க முடியாதது என்று  கொள்ள 
 மணி நேரப் பிரிவுகள் தாங்கிக்கொள்ளவும் 
 பல நாட்கள் பிரிதல் பொறு த்துக் கொள்ளுதலும் 
பலஆண்டுகள் பிரிவு  தளர்ச்சி அளித்தலும்
 காணப் பெறின்  வாழ்க்கை  ஏறக்குறைய 
 பிரிவுகள் அடங்கிய முறையே கொண்டு 
 காலங்கள்  செல்லும் என்று  அறிதல்  காண்க 

Saturday, February 27, 2016

என் வழியில் அமைதியாக

பாடம் படித்தேன் வரி பிறழாமல்
 மனனம் செய்தேன் வரி பிசகாமல்
நெஞ்சில் இருத்தினேன் பண்   மாறாமல்
 நிறைத்தேன் மனதை இடம் விடாமல்
இவ்வாறாகப் படித்தேன் என் இளமையில்
 யாவற்றையும்  முழவதுமாக   வல்லமையோடு
 இன்று படிப்புக் கை கொடுக்க  சிறப்போடு
 வாழ்கிறேன் என் வழியில் அமைதியாக. 

Friday, February 26, 2016

கண்டு களித்தேன்.

பால் போன்ற உள்ளம்
 பனி போல் மிருது
 சலனமே இல்லாத மனம்
 சட்டென்று  மலரும்  அழகு
தெளிந்த நீரோடை  போல் எண்ணம்
தெளிவாக  விரியும்  விவரம்
கும்பிடத் தோன்றும் விதரணை
 குறையாமல் அள்ளி கொடுக்கும் பக்குவம்
 கண்டேன் இவை யாவற்றையும் மிகவாகவே
 அவளிடம் வெளிப் படையாக அல்லவே
 காணின்  அவளிடம் மிக நளினமாகவே
 கண் விரிய கண்டு களித்தேன் மகிழ்வாகவே.


Thursday, February 25, 2016

மதி மயங்கி

ஆடி களைத்தப் பின் தூங்கினான்
ஆடை கலையாமல்

 பாடி முடித்தப் பின்  அயர்ந்தான்
படு வேகமாக

தூண்டி விட்ட பின் அமைதியானான் 
துடிக்க வைத்தப் பிறகு.

காட்டிக் கொடுத்தப் பிறகு   மறைந்தான்
கடித்துக் குதறிய போதாது

வாழ மறுக்கிறான் வாழ்வை  தொலைத்தவுடன்
 வடிந்து வழிந்து அடங்கியது  போதாமல்

மனிதனை  ஆட்டி படைக்கும் விதி  திரள
 மலைத்து நிற்கிறான்  மதி மயங்கி 

Wednesday, February 24, 2016

ஒட்டு மொத்தமாக

காலாற நடக்கிறேன்  கால் வலிக்காக
 கை ஓடிய எழுதுகிறேன்  கை செலவுக்காக
 கண் துஞ்சாமல் படிக்கிறேன்  அறிவுக்காக
 மனம்  போன படி போகா மல் வாழ்கிறேன்
 வெற்றி காண வேண்டும் என்பதற்க்காக
 காலும் கையும்  கண்ணும் மனமும்
 என்னுடன் ஒத்துழைக்க மறுத்தால்
 தொலைந்தேன்  ஒட்டு மொத்தமாக