Monday, December 29, 2014

நியாயம் பேசும் சண்டாளன்

கதை சொல்கிறான்
கதை கதையாகச் சொல்கிறான்
வேண்டியதை யும் வேண்டாதாதையும தின்று விட்டு
இன்னும் வாயைத்   திறக்கிறான்
நியாயம் பேசும் சண்டாளன் .

எருமைமாடு.

எந்த விசேடங்களையும் விமர்சையாக
எந்த விழாவையும் திருவிழாவாக
 நீ  கொண்டாடினாய் முழு மனதோடு
 எதுவும் சாதாரணம்  எதிலையும் ஒரு விட்டே த்தி
ஓர் எருமை மாட்டின் நிலையைக் கண்டேன் உன்னிடம் .


Friday, December 26, 2014

கண்ணில் நீர் மல்க

கோபம் அவனை ஆட்கொள்ள
 தனநிலை  மறந்தான்
தன்னை மறந்தான்
கத்தினான் முழு வீச்சோடு
வார்த்தைகள் விழுந்தன
வேகமாக ,
கனல் தெறிக்க
மனம் வெதும்ப
 நா  துடிக்க
அமைதியானான்
கண்ணில் நீர் மல்க 

Tuesday, December 23, 2014

கொஞ்சமா நஞ்சமா

பாலகனாக  விளையாட்டு
வளர்ந் தவுடனும் விளையாட்டு
 முதுமையிலும் விளையாட்டு
 முதலில் பந்தும் மட்டையுமாக
நடுவில்  பந்தை அடிப்பதுமாக
 இறுதியில் பந்தாடப்படுவதாக
 மனிதனைப்  பந்து
 படுத்தும் பாடு.
கொஞ்சமா நஞ்சமா 

முருகன் வழிபாடு

முருகன் வழிபாடு
ஒரு அழகு
வழிபடுவது  ஒரு வழி
இன்று அதற்கு ஓர்  அமைப்பு
அதற்கு ஒரு குழு
 தலைவர் என்ற பதவி
போ ட்டி, தேர்தல்
என்ற பின்  பூசல்
 பிணக்கு  என்ற
 வழிமுறைகள்
ஊறு  விளைவிக்க
வழிபாடு பாடு
திண்டாட்டம்



திருந்துமா இதயம்

கையும் ஆடுகிறது
கழு த்துமாடுகிறது
கு ரல் எ ழுப்புகிறது
குரல் வளை   எழும்புகிறது
நெஞ்சில் வலி
 துடிக்கிறது
 செய்த பாவத்திற்காக
 தெறிக்கிறது வலி
செய்த கொடுமைக்காக
திருந்துமா இதயம்
 திண்ணமாக இல்லை
 முருங்கை மரம் ஏறும்
 விடு விடு வென்று.

தலை மகன்

தலை மகன் அவன்
தலைமை தாங்க வேண்டியவன் அவன் 
தலையான மகன்  அவன.

தலையில்  சுமத்திய  பாரத்தை
சுமந்து கொண்டேயிருக்கிறான்
இருபது  ஆண்டுகளாக.

 இறக்கி வைக்கத் தெரியவில்லை
தடுமாறுகிறான் நிலமை  புரியாமல்.

இருந்தும் அவன் தலை மகன்  
இத்  தலையைப் பற்றி .என்ன சொல்வது. .

Saturday, December 20, 2014

வாழ்வே அது தான்.

கண் விழித்தேன்
விடிவைக்  கண்டேன்
 கண் துஞ்சினேன்
முடிவைக் கண்டேன்
வாழ்வே அது தான்
 தொடக்கமும்
தொடர்ச்சியும்
 முடிவும்
முடிவுரை யும் 

பிரிவினை

கணக்கில்லாமல்  பாகப் பிரிவினை
 கணக்குப் பண்ணாமல் சொத்துப் பிரி வினை
கணக்கு கொடுக்காமல் ஒரு பிரிவினை
எங்கு கண்டோம் இம்மாதிரி பிரிவினை
காண ஆவல் இருந்தால் வரவேற்கிறோம்
எங்கள்  குடுமபப் பிரிவினைக்  காண 

யசோதையின் கண்ணன்

கண்ணனின் கையில் குழல் 
கண்ணிலே குறும்புத  துளி   
உதட்டிலே  முறுவல் 
 எதற்கோ  தெரியவில்லை 
முட்டை முழி முழிக்கிறான் 
 யசோதையின் கண்ணன்