Thursday, March 17, 2016

வாய்க்கும் வயிற்றுக்கும் எட்டாமல்

ஒர்  ஊரிலே  ஒரு குடும்பம்
 வாழத் தெரியாத ஒன்று

சிக்கனம் என்று நினைத்து
 கஞ்சத்தனமாக வாழும்  குடும்பம் .


உண்ண உணவு பற்றாமல்
 உண்பதே வழக்கம்

 உடுத்தும் உடை  கசங்கலாக
உடுப்பதே  பழக்கம் .

கேட்டால் எளிமை  என்ற
பகட்டுப் பேச்சு.

குறைவில்லை இதில் மட்டும்
பேசிப்  பேசியே  வாழும் இனம்.

வாழ்கிறார்கள்  அன்றும் இன்றும்
வாய்க்கும் வயிற்றுக்கும் எட்டாமல்




Wednesday, March 16, 2016

மனிதனின் சரிவு

தன்  வசம் இழந்தான்
 தன்  நிலை மறந்தான்
 தன்னம்பிக்கை   துறந்தான்
  துயர்  அடைந்தான்
 கண் மூடினான்
 மனிதனின் சரிவு
 கண் முன்னாலே
 நிலை பிரண்டதனாலே 

Tuesday, March 15, 2016

காணேன் நான்

ஓடும்  நதியிலே
 காணும் அழகை
எங்கும் காணேன்.

காற்றில் தவழும்
இசையின்  அமைதியை
எங்கும் காணேன்.

மந்திரங்களின்  உச்சரிப்பில்
 எழும் ஒரு புல்லரிப்பை
 எதிலும் காணேன்.

யாவற்றையும்  விட
 குழந்தையின் சிரிப்பில்
துள்ளிய  ஆனந்தத்தை
 எதிலுமே  காணேன்.











விளக்கேற்றி வை

விளக்கேற்றி வை 
 திக்குத்  தெரியாமல் 
தத்தளிக்கிறாள் அவள் 
என்றவுடன் மிரண்டேன் 
வெகுவாக  சற்று நேரத்தில் 
 மருட்சி நீங்கி  என்னைப் புரிந்து 
 உணர்ந்தேன் நிலைமையை 
 எவ்வளவு பெரிய சொல் 
 என்று திகைத்தேன்  
 சொன்னேன்  பின்னே 
சற்று ஆசுவாசமாக 
 அவள் யாரிடம் 
 நெருக்கமாக  இருக்கிறாளோ 
 அவள்  ஏற்றட்டும்  விளக்கை
 எரியட்டும்  பிரகாசமாக 
 ஒளிரட்டும் ஒளி  விளக்காக
 நான் எங்கு வந்தேன் 
 என்று சொல்லி  திரும்பிப்
 பாராமல்  நடந்தேன் வேகமாக. 
 
 

Sunday, March 13, 2016

வாய்ச் சொல் வீரனடி அவன்

வாய்ச் சொல் வீரனடி அவன்
 சொல் ஒன்று இன்றைக்கு
மற்றோன்று நாளைக்கு!

வாய் வீச்சு நீளமே அவனுக்கு
 அளக்க முடியாத  அளவிலே
போகப் போக நீளம் கூடவே!

வாய் பேச்சு ஆணவமே அவனுடைய
 அதிகாரம் விஞ்சும்  மிகவே
அர்த்தமில்லாத அடங்காப் போக்கே!


வாய்க் கட்டு  தேவையே  அவன் பால்
 சொல்லுக்கு மதிப்பு காணுமே
கட்டுப்பாடு பேச்சிலே அவசியமே!


ஒரு சொல் போதுமே அவனறிய
நயமே உரைத்தல்  நன்மையே
 மாறாது  இருப்பது பெருமையே!

சொன்ன சொல் மாறாதவன்  அவன் என்று
சொல்படி நடப்பவன்
என்றறியப்படுவது பேரின்பமே!




கண்டு கொள்ளாதே

வீட்டைக் கட்டிப் பார்
கல்யாணம் பண்ணிப் பார்
 என்றெல்லாம்  பார்த்தால்
கட்டின வீட்டுக்கு ஆயிரம் குற்றம்
 பண்ணின கல்யாணத்திற்கு
ஆயிரம்  விமர்சனம்
 எதைச் சொல்வது மிகவே
 எதை விடுவது சற்றே
 தோன்றும் யாவருக்கும்
 நரம்பில்லாத நாக்கு
புரளும் எவ்விதமே 
 கண்டு கொள்ளாதே
 ஏறக்குறையக்  கூட
கட்டு பல வீடுகள்
 நேரே செல் உன் வழியில்  

Saturday, March 12, 2016

மனிதன் மனிதனாக

நாய் ஒன்று குரை க்கிறது
 தெரு முனையிலே
இடைவிடாமல் எதற்கோ
தெரியவில்லை.

நாய் தானே என்று நடக்கிறோம்
திரும்பிப் பாராமல்
 அதுவும் ஓர் உயிர் என்று
 நினையாமல்.


 அந்த மெத்தனம் ஏனோ
 புரியவில்லை
 அசட்டையாக இருப்பது
 நியாயமே   இல்லை .


நாய் என்று ஒதுக்குவது
 சரியில்லை
உயிர் என்று மதிப்பது
நியமம் கூட


இதற்கு காரணங்கள்  கண்டு
 பிடிக்க முடியவில்லை
ஏனோ
மனிதன் மனிதனாக
 நிறைவு பெறவில்லை