Saturday, November 30, 2013

என் அருமைப் பெண்ணே


தெருக்  கோடியில்  அமைந்த
மின் கம்பத்தின் கீழ்  அமர்ந்து
விளக்கொளியில் படித்து
காலையி ல்  எழுந்து  நாளிதழ்களை
 தெருத்  தெருவாகப்   போட்டு
கல்லூரிக்கு விரைந்து
 புத்தகங்களை கடன் வாங்கி
 கட்டணத்தை கட்ட முடியாமல் கட்டி
 மாலையில் திரும்பியவுடன்
பக்கத்துக் கடையில்   கணக்கு எழுதி
பின் நட்டநடு நீசி வரைப படித்து  
கல்லோரியிலே முதல் மாணவியாக
பயின்று வெளியே வந்த நிஜந்தா
உன்னுடைய காலம்  இனி மேல்
விடிவு காலம்  பொன்னான நேரம்
 அதை பயனுள்ளாதாக மாற்றி  
நல்வாழ்வு வாழ்ந்து
ஏழை எளியோருக்கு  வழிகாட்டி
வாழ் என் அருமைப் பெண்ணே

புது வாழ்வு

எதுவும் செய்யலாம்  என்ற போது 
எதுவும் செய்ய  முடியவில்லை 
ஏதுவும் செய்ய  முடியும் என்ற போது 
எதுவும் இல்லை செய்வதற்கு 
என்ன வாழ்க்கையோ தெரியவில்லை 
என்று சலித்துக் கொண்டே வாழ்கிற  போது 
சட்டென்று  ஒரு பிடிமானம் தென்பட்டது 
என்ன என்று குறுகுறுக்கும் மனத்திற்கு 
விடையாக ஒரு பச்சிளங் குழந்தை 
அழ முடியாமல் அழுது கொண்டு  கிடந்தது
அதை தூக்கி எடுத்துக்   கொஞ்சினவுடன்  
நெஞ்சில் இருந்த சலனம் பறந்து ஓடியது  
மனது  துள்ளிக் குதிக்க எண்ணங்கள்  விரைந்து ஓட  
என்னால் எல்லாம் முடியும் என்ற  நினைப்போடு
புது வாழ்வை தொடங்க ஆவலாய் உள்ளாள்  நிஜந்தா.  



முலமும் மந்திரமும்

ஆனந்தக் கூத் தாடினான் தில்லையில் நடராஜன்
 கால் மாற்றி மாறி ஆடினான்  வேகமாக  சிற்சபையிலே
காலைத் தூக்கி தூக்கி ஆடினான் கூத்தன்  அம்பலத்திலே


அண்டம் அதிர  கால் சலங்கைகள் குலுங்க  ஆடினான்
 கங்கை  துளி சிதற  அடியார்கள் எல்லாம் கொண்டாட
ஆடினான் தாண்டவம்  வெகு நாகரிமாக  வெள்ளி அம்பலத்திலே

காணக் கண் கோடி வேண்டும்  திரு நடனத்தைக் களி ப்புடன் நோக்க
பரவசமாக  கரைந்த்துருகி நெகிழ்ந்தது  கணகள்  துடிக்க 
கண்ட காட்சியை   என் சொல்லி விளக்குவேனோ .

மெய் மறந்தேன் நிலை இழந்தேன்  பரமா னந்தத்தைக்  கண்ட பிறகு
 பரததிற்கே  ஓர் இலக்கணம்  வகுத்த பரமனை   தாழ்   பணிந்து
முலமும் மந்திரமும் கண்ட  மூக்கண்ணணை  சிறைப்பிடித்தேன் .



Friday, November 29, 2013

கானல் நீர்

கானல் நீர் போன்று ஆனது வாழ்வு 
கனல் தெறி த்தது  கடு வாயிலே 
அனல் பற ந்த்தது வாழ்விலே 
அடித்துக் கிளப்பியது  காற்றிலே

 துவண்டு போனாள்  அவள் 
வெடித்துச் சிதறினாள்  துண்டு துண்டாக 
 விம்மி கதறினாள்  விக்கி விக்கி 
எல்லாம் போய்  விட்ட பின்  அழுது என்ன பயன்.?

கோபம் தலை  உச்சிக்கு ஏறிய போது 
தன்னை மறந்து தன நிலை உணராது 
பேசின பேச்சுக்கு வந்த வினை 
இன்று வாழ்வு இழந்த நிலை 

நிதானம் நியாயம் பார்த்து  நிற்காமல்  
தன் பிடிவாதத்தால் கொம்பாகிப்  போனாள்
வெற்றுக் கொடி  கூட அவள்  மீது படராமல்
பட்ட மரமாகிப் போனாள் நிஜந்தா .



Monday, November 25, 2013

பிடிப்புடன் வாழ

பிடித்தது என்றும்  \
பிடிக்காதது என்றும்
 பிரிக்காது இருந்தும்
பிடித்ததுக்கு ஒன்று
பிடிக்காததற்கு ஒன்று
என்று பிடிவாதமாக
பிடித்து வைத்திருந்தும்
பிடிக்க வேறு ஒன்று மில்லை
என்ற நிலை போய்
எல்லாமே பிடித்து விட்டது
என்று வாழப் பழகியும்
குறையே காணும்  மனிதர்கள்
நிறைந்த உலகிலே
பிடிக்காமலே   வாழும்
நிர்ப்பந்தம்   பிடித்துவிட்டது
என்னை  பிடிப்புடன்.

நாட்டின் நடப்பு அவ்விதம்

அழுத குழந்தைக்கு
பால் கிடைக்கும்   சட்டென்று
அழாத குழந்தைக்கு
அடி கிட்டும்  பட்டென்று


அடம் பிடித்த வளுக்கு
 ஆலிங்கனம்  அன்போடு
அமைதியாய் இருந்தவளுக்கு
 ஓரு    மோதல்   கோபமாக


வெட்டிக் கொண்டு  போனவளுக்கு
அனுதாபம்  கூடை கூடை யாக
ஒட்டியே இருந்தவளுக்கு
காயம் மலை மலையாக

குடு ம்பத்தை பிரித்தவளுக்கு
அதி காரம்  தூள் கிளப்பும்
உறவினை சேர்த்தவளுக்கு
வெளியேற்றம்  வீண் முட்டும்


நடிப்பவளுக்கு என்றுமே
விமோசனம்   அத்கமாக
இயல்பாய் இருப்பவளுக்கு
பழி  பாவம். மிகுதியாக

இது  தான் இன்று உலகம்
நடக்கும் நடப்பு  நல்விதமாக
இது தான் இன்று நாம்
எதிர் கொள்ளும்  வெடிப்பு. பலவிதமாக

மழையின் சிறப்பு

தகை சால் சிறந்த மழையின்  தன்மை
வரம்புக்குள் பெய்தால் மகிமை
 வரம்பு மீறி கொட்டினால் வன்மை
வரம்புக் குறைய வந்தால் இன்மை
பொய்த்து விட்டால் எடுபட்ட கொடுமை.