Sunday, June 5, 2016

ஆரோக்கியம்

வளர்ந்தேன்  அருமையாக
தாயும் படித்தவள்
தந்தையும் அது போலே.

 கண்டிப்பும் பாராம்பரியுமும்
 என் இள  வயதில்
 அதிகம் கண்டேன்.

 சொகுசு வண்டியிலே
 வயதில்  மூத்த   ஓட்டுனர்
 ஆரோக்கியம்  பள்ளிக்கும்,
 வாய்பாட்டு ஆசிரியரிடமும்,
பரத நாடிய வகுப்புக்கும்
 அழைத்துச் செல்வார்.

நான் செய்த சிறு தவறுகளைக் கூட
 அறிந்து அதை என்ன தாயிடம்
 சொல்லி விட்டு, "அம்மா
 தங்கச்சியை கண்டியுங்கள்"
 என்று  எடுத்தும் கொடுப்பார்.


ஒரு நேரம் என் தாய்க்கு
 கோபம்  மிகவே என்னை
  அடித்து  விட்டார்.
அழுத என்னை அன்பாகத்
 தூக்கிக் கொண்டு
"உன் நல்லதுக்குத் தானே
அம்மா" என்றார்.

நான் கோபத்தில்
 கத்தினேன்  செய்வதையும்
செய்து விட்டு
 இது  வேறேயா !.
கறுவினேன் மனதுக்கள்ளே.

நினைத்துப்   பார்க்கிறேன்
 ஆரோக்கியத்தின் அன்பையும் ,
 என்னுடைய ஆங்காரத்தையும்
விசும்புகிறேன் என்னுள்ளே


No comments:

Post a Comment