Monday, January 12, 2015

செல்வந்த்ரைக் காணின்

தன்னை இழந்தாள்
 தன்னோட பிறப்பை
மறந்தாள்
பிறன் மனை நாடாத
 தாயுக்கும்  பிறன் வழியில்
ஆதாயம்    காணும்
 தந்தைக்கும்   பிறந்த மகள்.
தன நிலை தாழ்ந்து
 செல்வந்த்ரைக் காணின்
 மண்ணில் விழுந்து
 வணங்கினாள்
 அவளைக் கண்டு
 மனம் புழுங்குகிறது
 எண்ணம் துடிக்கிறது
   
 

Friday, January 9, 2015

வீடு தேடி வந்தாள்

பிறந்தாள்  மாதேவி
மகத்தினிலே
 குலவிளக்காய்
 வெள்ளி மாலையிலே
 விளக்கு வைக்கும்
 மாலைப் பொழுதிலே
 வந்தாள்  மகராசி
 திருமகளாக
செல்வம் பொங்க
வளம் கொழிக்க
வீடு தேடி வந்தாள்
 அழகுப்  பெண்ணாய்
மழலைக்  குழந்தையாக!
  

Thursday, January 8, 2015

அரை தூ க்கத்திலே

துயில்  எழுந்தாள் 
 காலைப் பொழுதிலே
 கண்ணை மூடி மூடி 
 திறந்தாள் வைகறைப்  பொழுதிலே 
 சாள ரம் வழியே வந்த காற்று  
 உடலை வருட 
 சுகமாக நெட்டி  முறித்தாள்
 மங்கை சோம்பலோடு  
 மனம் பறந்து சென்றது 
 முடிந்ததை  நோக்கி 
 கவனம் ஆட்கொண்டது 
 நடப்பதை நினைத்து 
பார்வை பறிபோனது 
 எதிர்காலத்தை எண்ணி 
 சிக்கி தவிக்கிறாள் 
 மங்கை  அரை தூ க்கத்திலே 
  
 

ஒரு நெருடல்

கிட்டே வந்தால் 
 நூறு அடி ஓடுகிறான்.

தள்ளிபோனால் 
 வாலைப்  பிடிக்கிறான்.

அவனைத்  தாக்குவது 
 எளிது!
 புறந்த்தள்ளுவது 
 சுலபம்!
 அவன் என்றுமே
 ஒரு நெருடல்  

அறிவில்லை!

திசை தெரியாமல்
 திரிகிறான்
 கண்ணிருந்தும்!

பேசத தெரியாமல்
 பேசுகிறான்
வாயிருந்தும்!

பொருள் புரியாமல்
நடக்கிறான்
 காதிருந்தும்.

 ஏன்  தெரியுமா?
 அவனுக்கு
 அறிவில்லை!

Wednesday, January 7, 2015

தன் னை விட

தன் னை விட சிறந்தவன் இல்லை
 தன்னை மிஞ்ச ஆள் இல்லை
 தான்  சொல்வது சரி
 என்று வாதாடுவான்
 விவாதம் செய்து
 விவே கம் மறந்து
 காயப்படுத்தி
இரறு மாப்புக்கொள் வான்

  

கருணைத் தலைவன்

கலைஞன் அவன்
 கட்சியில்  அவன்
தலைவன்
 குடும்பத்தில்  அவன்
 தவறு
 குடும்பங் களில்  அவன்
 ( அவனுக்குப் பல)
 தலைவன்.

நின் றான் பெருமிதமோடு
 அன்று
 செல்வம் பெருகியது
 ஏன்  வழிந்தது
பொற்குவியலாக
குடும்பங்கள்  
மகிழ்ந்தன.

நிற்கிறான்   பெருங்கவலை யோடு
 இன்று
பதவிக்குச் சண்டை
 தாரங்களின்  ஆக்கிரிமிப்பு
 செல்வங்களின்   கொந்தளி ப்பு
  திக்கு முக்காடிகிறான்
கருணைத் தலைவன்