Tuesday, August 30, 2016

பரிதாபமாக

வளர் பிறை சந்திரனைப் போல்
வளர்ந்து கொண்டே போனது
 அவன்தன் பேச்சு.

தன்னை   விட என்ற
இறுமாப்புடன்  வலம்  வரும்
 அவன்தன்    நடப்பு .

நிகரில்லாதவன் என்ற  பெருமிதம்
 ஒவ்வொரு பொழுதிலும்
அவன்தன் செயலில்.

மேற்போனவன்  மேல் நோக்கி
 நிற்கும் கால் ஒரே நாளில்
மறைவான செல்வம் .

கண்ணிலே காணாமல்
கையிலே இல்லாமல்
பறந்து போனது.

நிற்கிறான்  தானாகவே
பெருமையும்  இல்லாமலே
தன்னந் தனியாக
பரிதாபமாக !


பலவாறாக

பல கோடி வேண்டி
 பலப் பல வியூகங்கள்
 வகுக்க

பல சக்தி வேண்டி
பலப்பல  ஹோமங்கள்
செய்து.

பல காரியங்கள் நடக்க
பலப்பல  வேண்டுதல்கள்
 அர்ப்பணித்து.

பலப் பல என்று பெருக்கி
 பலவற்றையும்  கூட்டி
பலவாக அளந்து.

பலவாறாக வாழ்ந்தான்
இங்க்கொன்றும் அங்கொன்றும்
 குடும்பமாக

பல தாரங்கள் பல பழக்கங்கள்
பலமுறை  தடுமாற்றங்கள்
என்று பலமிழந்து கொண்டு

பல வாகில்  பலவழியில்
 சிறுமைப்பட்டு  வாழ்கிறான்
 பலவேந்தன்  என்றவாக்கில்.






Sunday, August 28, 2016

எந்த நன்மையையும் இல்லாமல்

காலமும் பொழுதும் போக 
 வயதும் கூட 
 இளைஞன் இன்று முதியவன் 
 குழந்தை இன்று  மனிதன் 
மாறும் யாவையும்  வேகமாக 
ஒன்று மட்டும் மாறவேயில்லை 
 அது ஒரு குடும்பத்தின்  சொத்துக்கள் 
 வழக்கு வ ம்பு கணக்கு 
 என்று பல விதம் 
 பஞ்சாய்த்து   எல்லாவிதமும் 
 குறையில்லாமல்  ஆண்டுகள் 
 உருண்டோட நடக்கின்றன
 பணமும் நேரமும் உழைப்பும் 
முயற்சியும்  விரயமாக 
 யாருக்குமே எந்த நன்மையையும் 
 இல்லாமல் .

ஒரு மனிதனின்  புரியாத்தனத்தால்.

 

Saturday, August 27, 2016

அரிதிலும் அரிது.

தேடினான்  ஊசியை
 வைக்கோல்  போரில்
உறுதியாகக் கிடைக்காது
 என்று தெரிந்து.

தேடுபவனை என்ன என்னவென்று
குறிப்பது. அவன்  ஒரு  புரிந்தவனா
 புரியாதவனா  என்று நிர்ணியக்க
 முடியவில்லை.

அறியாத  கூட் ட்டத்தில்
 அறிந்தவனைக்  காண
படிக்காத குழுவில்
 படித்தவனைத்  தேடுவது  போல்.

நெறியில்லாதவர்கள் நிறைந்த
 நேர்மையின்றி  வாழும்
குழாமில்  நியாயம்
 எதிர்பார்ப்பது அரிதிலும்
 அரிது.





Monday, August 22, 2016

நகைப்புக்கு இடமாக விளங்கும் காட்சி

காக்கையும் கரைந்து
 தலை  தூக்கி  ஒன்றாக கண்ணால்
 கழுத்தைச்  சாய்த்து
பார்க்கும் கால்
அதன் பெருமை
 அதற்கே பிடிபடவில்லை.

சோளக்   கருது   பொம்மையோ
தானே அழகு என்று நினைத்து
 தலையைத்  திருப்பி திருப்பி
 காட்டும் விதம்  அதற்கே
 பெருமிதம்   என்றும் போது .


இரண்டுமே கை கோர்த்து
 போவோர்  வருவோரை
 நையாண்டி  செய்த   காலம்
 மலையேற. தற்போது
 இரண்டுமே நகைப்புக்கு
 இடமாக  விளங்கும் காட்சி
 வலித்து  வலிந்து தொடும்
 நேரம் மனவெழுச்சியை
அடக்கி சிரிக்க முடியாமல்
 தவிக்கிறார்கள்  மக்கள்.




Sunday, August 21, 2016

நிலையில்லாத மனம்

மனதில் ஒரு சலனம்
 எதற்கு என்று தெரியவில்லை
 ஏன்  என்று புரியவில்லை
 .
சடுதியில் தெளிந்து  விடுவேன்
ஏனோ  அவ்வாறு முடியவில்லை
சிறு கலக்கம்  புரட்டுகிறது.


 தளர்வடையாதவள்  நான்
 என்று இறுமாந்திருந்தேன்
 சற்று பின்னடைவு .

 நிலையில்லாத மனம்
 என்னை  ஆட்டுகிறது
 வெற்றிக் கண்டு விடுவேன்
 உறுதியாக.


Friday, August 19, 2016

நியாயம்.

வாரம் முடிந்தால் 
 ஊதியம் என்ற போது 
 மனம் நிறைந்த  
 பெருமிதம்.

மாதங்கள் உருண்டோடினால் 
ஊதிய உயர்வு  என்றவுடன் 
 மகிழவு  பெரும்பான்மையாக 
கச்சிதம்.

இவ்வளவும் முன்னே 
 நாம் செய்தது என்ன 
என்று நினைத்தால்  
 எரிச்சல்.

உதியத்திற்கு  உள்ள 
 வேலை  செய்தோமா 
 என்று  எண்ணினால் 
சலிப்பு.

இது போலே தான்  
அதுவும் என்று 
 சமமாக இருப்பது 
 தானே  நியாயம்.
  

 

 


  

Wednesday, August 17, 2016

முயலாலாமா?

புரிய வைக்க முடியுமா?
 தெரியவில்லை?
 முடியம் என்பது 
 ஒரு பெரியதல்ல.
 முடியாது என்றாலும் 
 ஒன்றும் ஆகப் 
போவதில்லை.

காலங்கள் முடிகின்றன 
 வயது  முதிர்கிறது 
 அநுபவங்கள் 
பலவிதம் 
 இருந்தும்  ஏதும் 
 முடிவுக்கு வரவில்லை.

ஏன்  என்று நோக்கின் 
 மனதில் அழுத்தம் 
 வெகுவாக இழுக்க 
விட்டு விடலாம் 
என்கிற போது  
 மனம் ஒத்துப் போக 
 அறிவு முயன்று பார் 
வெற்றி உறுதி 
 என எடுத்துக் 
 காட்டுகிறது.

முயலாலாமா?
 
 



 

Tuesday, August 16, 2016

என்னவென்று உரைப்பது?

எடுத்தான் முடித்தான்
 என்று இல்லாமல்
 சொன்னதயே
சொல்லிச் சொல்லி
 செய்ததையே
 செய்து செய்து
 என்னவென்று புரியாமல்
 எதற்கென்று என்று
 அறியாமல்
மற்ற வர்களுக்கும் இடம்
 கொடுக்காமல்
 தானே வலது மாறி
இடது விட்டு
 முழுவதுமாக
முடிக்காமல்
 பாதிக்  கிணறு
கூடத்  தாண்டாமல்
 திண்டாடும்
  விளங்காத  குமரனை
 என்னவென்று  உரைப்பது?






Monday, August 15, 2016

புழுதியும் பிதற்றலுமாக

பெண்ணின் மனதை 
 அறியாதவன் 
தன பெருமை பேசி 
 அலசுகிறான்
 தான் செல்வந்தன் 
என்றும் 
 செல்வாக்கு  நிறைந்தவன் 
 என்றும் 
வாய் ஓயாமல் 
 அள்ளி விடுகிறான் 
 புழுதியும்   பிதற்றலுமாக.


பெண்ணோ நிலை குலைந்து 
 புலம்புகிறாள்  தன் 
 நிலை  வருந்தி 
 மணவறையில் அமர வேண்டியவள் 
துடித்துக்  கதறுகிறாள் 
பொருட்படுத்தாது   பொய்யை 
 உண்மையாக்கி  நிலை 
 நாட்டுகிறான் 
 அவனுக்குத் துணையாக 
 அவன் தமக்கையும் 
 தமையனும்  வாதாட
அதிர்ந்து நிற்கிறார்கள் 
கூடினவர்கள்.


  

 
 

 

Wednesday, August 10, 2016

கழுத்திலே மாலை

கழுத்திலே மாலை  
கண்ணிலே நாணம்
தலையோ குனிந்து
 நிலம் பார்க்க
 வந்தாள்   மணமகள்
 அன்று.


கழுத்திலே மாலை
 அதே போல
 கண்ணிலே அகம்பாவம்
தலையோ நிமிர்ந்து
 நேரே நோக்க
 வருகிறாள்  மணப்பெண்
 இன்று.

தவறில்லை
 அச்சம், நாணம். பயிர்ப்பு
 யாவுமே   மலை ஏறிவிட்டன.
நிற்பதென்னவோ
ஆணவம், தைரியம், திமிர் .
பொறுத்துக்   கொள்வதே
 விவேகம்.

பெண் என்றாலே
 போதும்.

இனம் பெருக்க, குடும்பம்
தழைய, பெண்  வேண்டும்.
பொறுப்போமாக.  





Saturday, August 6, 2016

ஒரு தாயின் வயிற்றில்

வாழ்ந்தான் தனக்குத்  தானே
 தனது  தானே  எல்லாம்
 என்று சிவலிங்கம்
 நினைக்கவில்லை
 மற்ற்வர்களைத்    துளியேதும்.

விலகினான் தனக்கு இல்லை
என்று நினைத்துக் கொண்டு
சுந்தரம் .
தன்னிடத்தை   விட்டு விட்டு
 மற்றவர்களுக்கு தனதையும் .

கலக்கினான் .முழுவதுமாக
நேர்மை மாறி நிலைமை  தவறி
மெய்யன்
கருதவில்லை  மானம்
 நாணயம் அதற்காக எதையுமே.


கெடுத்த்தான் குடியை
 ஒழுக்கம் அற்று  இடம் தடுமாறி
மாணிக்கம்
கடுகளவும் எண்ணவில்லை
எதைப்  பற்றியுமே .

ஒரு தாயின்  வயிற்றில்
 பிறந்த நான்கு
 விநோதங்கள்.

 எவனுமே நேர் கோடாக
 அல்ல.



Monday, August 1, 2016

எண்ணங்களே வாழ்வு

வருமானம் பல கோடி என்பான்.
 பரிமாணம் பல விதம் என்பான்.
 
பிடிமானம் சிலவற்றில் அவனுக்கு.
படிமானம் சில வழிகளில் அவனுக்கு.

அனுமானம் அவனது   வழி.
 சன்மானம் வேண்டுவதே  வழி.

அவமானம் கண்டான் யாவற்றிலும்
அவதிக்குள்ளான எல்லாவற்றிலும்.