கையிலே ஒரு விளக்கு
மனதிலே மிக இருட்டு
வெளியிலே பளபளப்பு
உள்ளே ஒரே அழுக்கு
முகத்திலே ஒரு மினுமினுப்பு
மனதிலே துரு வும் களும்பும்
பேச்சிலே ஒரு நடிப்பு
எண்ணமெல்லாம் பிசகு
இவ்வோரும் வாழ்கிறார்கள்
எல்லாவிடத்திலும் பெருமையாக
எதிலும் எப்போதும்
நிரவலாக
எங்கும் பங்கிலும்
நெருடலாக
நி னைத்த லும் நினைப்பிலும்
முள்ளாக
தொடருகிறது பயணம்
ஏற்றத்துடன்
No comments:
Post a Comment