Thursday, April 30, 2015

கண்ணில் நிற்கும் அழகு

 கண் கவர் அழகு
 கண்ணில் நிற்கும் அழகு
 மதிக்கும் விதம் அலாதி
 தன்னம்பிக்கை  மிகை
உயர்வான சிந்தனை
 உன்னதம்மன் நினைப்பு
 அளந்து பேசும் ஆற்றல்
 அதிர்ந்து பேசாத  அடக்கம்
 தனது வேலை தான் உண்டு
 சிறப்பான் ஈகை
 இர க்கம்  கனிவு
 என்று வாழும் பெண்ணை
 நிந்திக்கிறான்  ஒரு பாமரன்
 பட்ட மரம் துளிர்  விடுமா
 அறியாதவன் தெரிந்து கொள்ள
 முற்படுவானா ?


 


Wednesday, April 29, 2015

கலகி வருவான்

கலியுகத்தில் கல்கி வருவான்
 அவதாரத்தின் கடைசி
 வருவான் என்ற போது
 வர வேண்டும் இப்போது
 கலி முற்றி  அநியாயம்  பெருக
அரசியலில் பல  பழி ப்புக்கள்
 ஆன்மிகத்தில் பல களிப்புக்கள்
தொழிலில்  பல விதர்ப்புக்கள்
குடும்பகளில்   பல் அக்கி ரமங்கள்
 ஊழல்கள்  ஊதாசினங்கல் மல்க
 கலகி வருவான் எ ன்ற எதிர்பார்ப்பு
 ஓங்கி  நிற்க காத்து காத்து
 பூத்துப் போகின்றன கணகள்

Saturday, April 25, 2015

நினைந்து உருகி

நினைந்து உருகி
கசிந்து கண்ணீர்  மல்கி
 கை தொழுது நின்றாள்
 இறைவன் முன்னே

அவன் எப்போதும் போல்
சிலையாக  நின்றான்
 கையில் அபய  முத்திரையுடன்
 அவள் முன்னே

விசும்பினாள் விம்ம்னா
 கதறினாள்  மனச்  சோர்வோடு
அசைந்தான் முழு முதற் கடவுள்
 அருள் பாலித்தான்.

கண் துடைத்தாள்  புறங்கையால்
முடியை அள்ளி முடித்தாள்
 ஒரு வினாடி  நோக்கினாள்
 இறை வன் வழி  விட்டான்.
   

Thursday, April 23, 2015

வெட்க்மேயி ல் லாமல்

வாழ்ந்தான் இராமன்
எவ்வாறு
 ஈ சனின் அருளால்
 என்றால்
 எவ்வாறு
 சேவை என்பான் இராமன்
சேவை என்றால்
 ஒரு கழகப் பணியில்
 என்பான்
எவ்வாறு
அதில் ஒரு பொறுப்பில்
 என்பான்
 எவ்வாறு
செயலர்  பொருளாளர் என்று
எவ்வாறு
 பணி செய்வது என்பான்
 பணி  என்றால்
 பங்கு வைப்பதில்
 உண்டியலில், கட்டட செலவில்
போக்குவரத்தில்
 ஆண்டு தோறும்  சில பல
 லட்சங்கள்
 சுருட்டி  வட்டிக்கு விட்டு
வாழ்கிறான் இராமன்
அமோகமாக.
தொண் டன்  என்று
வெட்க்மேயி  ல் லாமல்




Monday, April 20, 2015

பேதை

கை கொடுப்பார் யாரும் இல்லை
 சமை கொடுப்பவர் பலர் இருக்க 
 பேந்த பேந்த முழிக்கிறாள் 
 பேதை 
கையில் குழந்தையுடன் 
 வயிற்றில  சுமையுடன்.

மயங்கவும்

பாட்டிலே  ஒரு இனிமை
 அதில் ஒரு தனிமை
 அதில் ஒரு வலிமை
 ஒரு தனித்துவம்
 ஓர் இன்பம்
 கேட்பதில் ஒரு  தித்திப்பு
 மனதில் ஓர் ஈர்ப்பு
கிறங்க வைத்தப் பாட்டு
 மயங்கவும் வைத்தது.

Sunday, April 19, 2015

கலந்தது சோகம் .

சோகம் கண்டேன்  முகத்திலே
கண்ணிலே துளிர்த்த  கண்ணி ரிலே
 துடிக்கும் உதடுகளிலே
நடுங்கும் விரல்களிலே
 வாடிய  வதனம்
 வதங்கிய தோற்றம்
 மிறிய சிரிப்பிலே
 கலந்தது  சோகம் .

Tuesday, April 14, 2015

சிறு சிறு தொந்தரவுகள்

சிறு சிறு தொந்தரவுகள்
கட்டுக்கடங்காமல்
 தொல்லைப் படுத்த
 மனம் வெதும்பினாள்
 பெரிய இடிகளைத்
 தாங்கிக் கொண்டவள்
 நிலை குலைந்து நிற்கிறாள்
 சிறிது என்று நினத்தது
 பெரிய முள்ளாக
 தைக்கும் பொது
 வேதனை மிகவாகிறது.
 

சாலச் சிறந்ததது

போனவன் திரும்பினான்
 பூ மண த்தோடு
 எதற்குப் போனான்?
 ஏன் திருபினான்?
அவனுக்கே தெரியாது
 பிறகு அல்ல
 மற்றவர்களுக்கு
 அன் அப்படித் தான்
என்று முடிவெடுக்க
 அவன் வேண்டுமென்றே
 என்று புரியம்  போது
 அவனை விட்டு
 விலகி நிற்பதே
 சாலச் சிறந்ததது


Monday, April 13, 2015

வந்த படி

வாய் வந்த படி பேசும்
 பேசினால் விபரிதம்
 கண் விரும்பியபடி பார்க்கும்
 பார்த்தால்   அநாகரிகம்
கால் தோன்றியபடி நடக்கும்
 நடந்தால்  துன்பம்
 கை நினைத்தபடி  எழுதும்
எழுதினால்   துயரம்
 யாவற்றையும் அவை
 நினைத்த படி விட்டால்
 கலக்கம் விஞ்சும்
கலகம் மி ஞ்சும்

   

Saturday, April 11, 2015

காதோடு ஒரு செய்தி

காதோடு ஒரு செய்தி 
 காற்றோடு வந்தது 
 காதிலே விழுந்தது 
 காற் றோடு  கலந்தது  
காதோடு நில்லாமல் 
 காற்றோடு போனது 
 காதுகள் பல கேட்டன 
 காற்று ஊ தியது 
காதுகள் புடைத்தன
காற்று பற்றிக் கொண்டது 
காதோடு  வந்து 
 காற்றோடு பரவி 
 கொழுந்து விட்டு எரிகின்றது.

வலியோடு வலி

 காலிலே  வலி
வி ண் வவி ண் என்று
 எழுந்தால் வலி
 உட்கார்ந்தால்  வலி
நடந்தால் வலி
படுத்தால் வலி
 எந்நேரமும் வலி
 தாங்க வில்லை  வலி
 வலியோடு வலி  

Wednesday, April 8, 2015

பல முறை

படித்தான் பல முறை
மனதில் ஏறவில்லை
படித்தான்  பல முறை
 புரியவில்லை
படித்தான் பல முறை
 என்ன  என்று தெரியாமல்
 படித் தான் பல முறை
புரியாமல்
தெரியாமல்
பல முறை
 பல முறை

  

தொடருகிறது பயணம்


    கையிலே   ஒரு விளக்கு
 மனதிலே மிக  இருட்டு
 வெளியிலே  பளபளப்பு 
உள்ளே ஒரே அழுக்கு
முகத்திலே ஒரு மினுமினுப்பு
மனதிலே துரு  வும்  களும்பும்
 பேச்சிலே ஒரு  நடிப்பு 
எண்ணமெல்லாம்   பிசகு
 இவ்வோரும் வாழ்கிறார்கள்
 எல்லாவிடத்திலும்  பெருமையாக
 எதிலும் எப்போதும்
 நிரவலாக
 எங்கும் பங்கிலும்
 நெருடலாக
 நி னைத்த லும் நினைப்பிலும்
 முள்ளாக
தொடருகிறது பயணம்
ஏற்றத்துடன்
 

கபட நாடகத்தை

நேர் முகம் நிறைந்த முகம்
 புற முகம்  வெந்த முகம்
 நேரிலே  நியாயமானவன்
 புறத்திலே  அநி யாயமானவன்
கண்களிலே ஒரு பாவம்
 மனதிலே ஒரு வெறுப்பு
போக்கிலே  ஒரு நடிப்பு
 காட்டும் துடிப்பு
 வாழ்கிறான் அவனும்
 இரட்டை வாழ்க்கை
 உலகுமும் நம்புகிறது
 அவனின் வேடத்தை
கபட நாடகத்தை 

Saturday, April 4, 2015

ஒரு தேவன்

தன்  தேவை முதல்  
தானே முதல் 
 தான் செய்வது சரி 
 தான் இடறினால்
 அது விபத்து 
 தான் கோ பப் பட்டால் 
 அது  நியாயம் 
 தான் ஒரு  நீதிமான் 
 தனக்கு  வலி வந்தால் 
 அது ஒரு பெரிய வலி 
 மொத்தத்தில் தான்  
ஒரு தேவன் என்ற நினைப்பு.
 
 

Thursday, April 2, 2015

தா யும் மகனும்

நினைந்து உருகும் தாயைக்  கண்டேன்
 வெறுத்து ஒதுக்கும் மகனையும் கண்டேன்
தாயின் கண்ணில் பாசம் ஒளி யூட்ட
 தனயனின் கண்ணிலோ கோபம் உமிழ
 இரு துருவங்களாக இருவரும் நிற்க
 குழம்பி னேன் அவர்களை நோக்குங் கால்
 எங்கோ ஒரு தவறு நிகழ்ந்துள்ளது
 தா யும் மகனும் மறை க்கிறார்கள்
 காலம் தான் பதில் சொல்ல வேண்டும்
 காலம் கனியும் மாற்றம் உண்டாகும் .

சொக்கேசன்

காலனை எட்டி எட்டி உதைத்தான்
 ஆடல் வல்லான்
 காலன் திமிறி திமிறி முண்டினான்
 விடவில்லை அவனை
 தள்ளினான் புரட்டினான் விரட்டினான்
  ஞா ன்க்கூத்தன்
 இருந்தும் துள்ளிப் பார்த்தான் காலன்
சொக்கேசன் விட்ட பாடில்லை
 ஒரே மிதி மிதித்தான்
 காணாமல் போனான் காலன்.
  

Wednesday, April 1, 2015

கனவுகள் நனவாகுமா

கனவுகள் நனவாகுமா
 என் விருப்பாம் அதுவல்லவே
நினைவுகள்  பல
விருப்பங்கள்  நிறைய
எல்லாம்  நடந்தால்
 பூவுலகம் தா ங்காது
மனிதனின் கால் பாவாது
 பற ப்பான்   ஆகாயம்   வழியாக
 பரவுவான் விண்ணிலே
தாய் மண்ணை மறந்து விடுவான்
 வெகு வேகமாக.

தன கையே தனக்கு உதவி

கதவு திறந்து இருக்க
 உள்ளே ஒரு நிசப்தம்
 யாரும் கண்ணில் படவில்லை
 எங்கும் ஒரு அமைதி
 நிதானித்து  நோக்கில்
ஓசை என்பதை வெறுக்கும்
 ஒரு குடு ம்பம் போல்
 தன வேலை தா ன உண்டு
 தன்னால் முடியும் என்ற
 ஒரு விழிப்பு
 தன கையே தனக்கு உதவி
 என்ற சிந்தனை
 போற்றுவதற்குரிய
 பெருமைக்குரிய  நினைப்பு.