Friday, January 23, 2015

ஊரும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம்

அன்பும் அரவணைப்பும்
 என்று வாழ்ந்தது பொய்.

பாசமும் பிணைப்போடும்
வளர்ந்தது பொய.

மெய் பொய் ஆகிப் போனது
 மறந்தது நெஞ்சம்
மர த்தது கொஞ்சம்.

காற்றுக் கூட பட வேண்டாம்
 என்று ஒதுங்கிப் போக.

தூசும் வேண்டாம் துடைப்புமும்
வேண்டாம்  என்று விலகிப் போக


ஊரில் போவோர் வருவோர்
நினைவுப் படுத்தும் போது

மனம் சீற
 கண்கள் துடிக்க
உடல் சிலிர்க்க
ஊரும் வேண்டாம்
ஒன்றும் வேண்டாம்
என்று ஓடத் தோன்றுகிறது

  

No comments:

Post a Comment