Wednesday, May 11, 2016

வாழ்வாதாரம்

திருவிழாவுக்கு வந்தேன் நான் 
கண்டேன்   விமர்சையாக 
பத்தாண்டுகளுக்கு முன் 
  
செம்பனை  தோட்டத்திற்குள் 
 சென்றேன் என்னவென்று அறிய
ஆவலுடன் 

 பனை மரம் நின்றது உயரமாக  
ஆடாமல் அசையாமல்
ஓர் அச்சம்  .

 பனம் பழமோ   மிகப் பெரிதாக 
 இராட்சத  அளவிலே 
ஒரு பிரமிப்பு 

தோட்டமோ அமைதியில் உறைந்து 
மௌனமாக  நின்றது.
ஓர் உதறல் 

புழுக்கமோ  மிக அழுத்தமாக  
வியர்வை  வழிந்தோட 
ஒரு புகைச்சல் 

சுற்றி வந்தேன் செம்பனை  
 தோட்டத்தில் 
என்னது என்ற பெருமையுடன் 

அன்று தெரியாது எனக்கு 
 இதுவே தொழில் ஆகும் என்று.
ஓர் ஆச்சரியம் 

அன்று தொடங்கியது இன்று வரை 
 என்னை விடவில்லை  
தொடர்கதையாக 

சிநேகமாகி விட்டோம்  கூடுதலாகவே 
 பிரியாமல் இருக்கிறோம். 
ஒரு நாளை போல் 

வாழ்கிறேன்  பல மணி நேரம் 
செம்பனை மரத்தின் கீழே
காசுக்காக 

என்னுடன் குரங்கும்,பாம்பும்  
 அட்டையும், உடும்பும் .
பங்கு போட

வாழ்வாதாரம் அது  என்கிற போது  
 வலியே  வலிமையாக 
 வலுவான வாய்ப்பாக  உணர்ந்து 
கழிக்கிறேன்  காலத்தை  
களைப்புடனும் களிப்புடனும் .


 
 


 



No comments:

Post a Comment