Thursday, May 5, 2016

படிக்காமல் சிறக்காமல் வாழ்கிறான்.

அவசரம் இல்லை அவனுக்கு
 இழுத்து விடுவான் பெரும்பாலும்
 தனக்கு என்றவுடன் துடிப்பான்
அள்ளித் துள்ளி முடிப்பான்.


தான் ஒரு நிபுணன் என்பான்
 கணக்கிலும் தொழிலும்
 வெகு விரைவில் விற்பான்
 தன் பங்கை அல்ல  தம்பியின்.

வாழ்கிறான் ஓர்  ஊரில்
அவனைப் போல் பல பேருடன்
 திருமணம், சாவு என்றே சென்று
 அன்றாடப் பொழுதை போக்குவான்.

கொஞ்சம் பணம் கையிலே புரள
 நடை போடுகிறான்  முறுக்காக
 ஆமாம் சாமி போட ஓரிருவர்
பொழுதைக் கழித்து விட்டான்

மிச்சம் சொச்சம் நாட்களில்
 வெட்டிப் பேச்சு  பேசி கலந்து கழிப்பான்
அவன் வாழ்க்கையே ஒரு மாதிரி
 படிக்காமல் சிறக்காமல் வாழ்கிறான்.

No comments:

Post a Comment