Monday, May 16, 2016

திருகலும், கொட்டும்

காலங்கள் மாறும்
 வயது  ஏறும்
மனம் மாறும்
 நினைவுகள் தொடரும்

இன்று ஏனோ
 திரும்பிப் பார்க்கிறேன்
 என் பள்ளிக்   காலத்தை
 நிறைவு தன்னாலே.

திருமதி டேவிட்
 என்னுடைய ஆசிரியர்
வீ ட்டுக்கு வருவார்
அதி காலையில் .

எடுத்தவுடன் ரென்  & மார்டின்
ஆங்கில இலக்கணம்
 வினைச் சொற்களை
காலங்களில் எழுத  பணிப்பார்.


ஓரளவு எழுதி விடுவேன்
"புட்"க்கு  இறந்த காலத்தில்
புட்டட்  என்று
எழுதி விட்டேன்
 காதைத் திருகினார்
 சற்று பலமாக.

நினைத்தால் இன்று கூட
 வலிக்கிறது. அத்தவறை
 என்றுமே   பின்
 செய்ததில்லை.


தமிழில் அதற்கு மேலே
 பெற்றுக் கொள்
 என்பதற்கு  பெற்றுக் கொல்
 என்று எழுதியவுடன்  தலையில்
 ஒரு கொட்டு .


புடைத்த தலையின் வலி
  இன்றும் என்னை பயமுறுத்த
 கவனம் மிக அதிகமாக
லகரம், னகரம்  என்கிற
வேளையில்.

அதே நேரம்
 தவறில்லாமல்
 பெருக்கல்  வாய்ப்பாட்டை
 சொன்ன போது அள்ளி
அணைத்துக்   கொள்வார்.


ஏனோ இன்று நான்
ஆங்கிலத்தில்  நிறையவே
 தம்ழில் குறைவாக
 எழுதுகிறேன்
 கணக்கை முற்றிலும்
மறந்து

திருகலும்,  கொட்டும்
 செய்யும் வேலையோ?

 .
















No comments:

Post a Comment