Friday, November 1, 2013

எந்தாய் தந்தை முகங்கள்

நான்  அந்த வீட்டிலே பிறந்தேன்
செல்வ மகளாக  வளர்ந்தேன்
 பூவிலும் மென்மையாக  கொண்டாடி
செல்வமும் செல்லமும் ஒருங்கே கூடி
தாயின் அன்பும்  அரவணைப்புடன்  ஆடிப்பாடி 
கண்டிப்பும் கறாருடன்  ஓடி விளையாடி
தந்தையின்  கனிவும் கட்டுப்பாட்டுன்  படித்து சிறக்க
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக
மகிழ்வுடன் வளர்ந்து  கல்வியில் மேம்பட
சீருடன் சிறப்புடன்  மண  வாழ்க்கை அமைய 
நான் பிறந்த வீட்டை  விட்டு   விலகினேன்


நாட்கள் செல்லச் செல்ல  அந்த வீடு  மாறியது
இருந்த ஒழுங்கும் நேர்மையும் முற்றும் மாற
பெற்றவர்கள் வாழ்ந்த முறை தலை கீழாக திரும்ப
செழிப்பு வறண்டு  தேய்ந்து  காய்ந்து போக
பொய்யும் பித்தலாட்டமும் ஏமாற்றும்  பெருக
செல்வம் சொல்லாமல் . கொள்ளாமல்  ஓட
 என்னோடு  பிறந்தவர்கள்  யாவற்றையும்  கைபற்ற
என் பிறந்த பங்கும் உரிமையும் என்னிடமிருந்து பறிக்க
விழி  பிதுங்கி வழி  நோக  துடித்தேன் நான்
அச்சமயத்தில்  ஏனோ 
எந்தாய் தந்தையின்   முகங்கள்  தோன்றி மறைந்தன


No comments:

Post a Comment