Sunday, January 19, 2014

ஒர் உயிரினம் என்றே.!

கா கா என்று கரையும்
 கறுப்பான  காகத்தை
 பாடினவன் இல்லை.

பொதி சுமக்கும் கழுதையை
பரிகசித்தவன் உண்டு
பாடினவன் இல்லை.

ஆடும் மயிலையும்
பாடும் குயிலையும்
பாடினவனுக்கு தெரியவில்லை  இவைகளை.


காகத்தைக் கண்டு கரிததனர்.
கழுதையை விரட்டினர்
ஏன்   என்று புரியவில்லை .

உலகில் பிறக்கும்  உயிர்கள் எல்லாம்
ஒரு வகையில் அழகு
என்று தெளிந்து நோக்கு.


காகமும் ஓர் அழகு
அது  பார்க்கும்  விதமே
 ஒரு தனி அழகு.


கழுதையும்  ஓர் அழகு
அது உதைக்கும் தோரணையே
ஒரு தனி அழகு.

பார்க்கும் பார்வையிலே
 இருக்கும் அழகு
 பார்ப்பதிலே  தோன்றும் அழகு.

காகத்தைப் பாடினேன்
 கழுதையைப்   பாடினேன்
யாருக்காகவும் அல்ல  
அவைகளும் ஒர் உயிரினம் என்றே.!





No comments:

Post a Comment